Headlines facebook
இந்தியா

Headlines|சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி முதல் விஜயை சந்தித்த பிரசாந்த் கிஷோர் வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி முதல் விஜயை சந்தித்த பிரசாந்த் கிஷோர் வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.

PT WEB
  • இரண்டு நாள் சுற்றுப்பயணமாக பிரான்ஸ் சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு. அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அளித்த இரவு உணவு விருந்தில் பங்கேற்றார்.

  • தமிழகத்தில் ஏழை, எளிய மக்கள் 86 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்க அமைச்சரவை ஒப்புதல். 6 மாதங்களில் பட்டா வழங்கி முடிக்க 2 குழுக்களை அமைக்க உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு.

  • தமிழ்நாடு ஆளுநருக்கு எதிரான வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம். ஒரு வாரத்தில் அனைத்துத் தரப்பு வாதங்களையும் எழுத்துப்பூர்வமாக சமர்ப்பிக்க உத்தரவு.

  • தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயுடன் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சந்திப்பு. விஜயின் இல்லத்தில் இரண்டரை மணி நேரம் ஆலோசனை.

  • பழநி முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழாவையொட்டி திருக்கல்யாண வைபவம். வள்ளி - தெய்வானையுடன் வெள்ளி ரதத்தில் எழுந்தருளிய முருகப் பெருமான்.

  • தமிழக அரசு ஊழியர் சங்கத்தினர் இரவிலும் போராட்டம். பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தல்.

  • பத்திரப்பதிவு அலுவலகங்கள் இன்று செயல்படும் என தமிழக அரசு அறிவிப்பு. ஆவணப் பதிவுகளை மங்களகரமான நாளில் மேற்கொள்ள விரும்புவோருக்காக ஏற்பாடு.

  • நெல்லை மாநகராட்சி பகுதியில் மருத்துவக்கழிவுகள் கொட்டப்பட்ட சம்பவம். புதிய தலைமுறை செய்தி எதிரொலியாக மருந்து விற்பனை பிரதிநிதி கைது.

  • சென்னை மாநகரப் பேருந்தில் கட்டணமில்லா பயணம் மேற்கொண்ட பெண்களிடம் இளைஞர்கள் வாக்குவாதம். மகளிரை இருக்கையில் இருந்து எழுப்பியதாக புகார்.

  • பிரபல யூடியூபர்கள் மீது அசாம் காவல் துறை வழக்குப்பதிவு. யூடியூப் நிகழ்ச்சியில் ஆபாசமாக பேசியதால் நடவடிக்கை.

  • ஹஜ் புனித யாத்திரையை முன்னிட்டு விசா கட்டுப்பாடுகளை அறிவித்தது சவுதி அரேபியா. யாத்திரைக்கு குழந்தைகளை அழைத்து செல்லவும் தடை.