மக்களவையில் இன்று மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு அதிகரிக்கப்படுமா என எதிர்பார்ப்பு.
2027இல் இந்தியாவை வளர்ந்த நாடாக்குவதற்கான அம்சங்கள் பட்ஜெட்டில் இடம் பெற்றிருக்கும் என பிரதமர் மோடி கருத்து. ஏழை, நடுத்தர மக்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் அம்சங்கள் இருக்கும் என்றும் சூசகம்.
மக்களவைத் தேர்தலுக்காக 1737 கோடி ரூபாய் செலவு செய்த பாஜக. விளம்பரங்களுக்கு மட்டும் 611 கோடி ரூபாய் செலவு செய்ததாக தேர்தல் ஆணையம் தகவல்.
விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார். தேர்தல் பரப்புரை மேலாண்மை பொதுச் செயலாளராக ஆதவ் அர்ஜுனாவும், ஐ.டி. பிரிவு துணைப் பொதுச் செயலாளராக நிர்மல் குமாரும் நியமனம்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுடன் தமிழக வெற்றிக் கழக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா திடீர் சந்திப்பு. இந்நிலையில், வாழ்த்து பெறுவதற்காகவே சந்திக்கவந்ததாக ஆதவ் பேட்டி.
ஆதவ் அர்ஜுனாவுடனான சந்திப்பில் அரசியல் கணக்கு இல்லை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேட்டி.
நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளில் விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் எனவும், காவல் துறையுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்குமாறும் உள்துறை செயலாளருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.
வெள்ளியங்கிரி மலையில் இன்று முதல் மலையேற்றம் செல்ல அனுமதி. பக்தர்களின் நலன் கருதி பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது கோவை மாவட்ட நிர்வாகம்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கல்லூரி மாணவி காரில் கடத்தல். இந்நிலையில், சிசிடிவி காட்சிகளை சேகரித்து கடத்தல் கும்பலை தேடும் காவல்துறை.
கோயில்களில் விஐபி தரிசன முறைக்கு எதிரான பொதுநல மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு. கோயில் நிர்வாகங்களும், சமூகமும்தான் முடிவெடுக்க வேண்டுமென நீதிபதிகள் கருத்து.
ஆம்ஆத்மி கட்சியிலிருந்து 8 எம்எல்ஏக்கள் விலகல். தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத நிலையில் முடிவு.
கனடா, மெக்சிகோ, சீன பொருட்கள் மீதான கூடுதல் வரிவிதிப்பு திட்டம் இன்று முதல் அமல். அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு.
விண்வெளியில் அதிக நேரம் நடந்த பெண் என்ற பெருமையை பெற்றார் சுனிதா வில்லியம்ஸ். 62 மணி நேரம் 6 நிமிடங்கள் விண்ணில் நடந்து புதிய சாதனை.
இங்கிலாந்துக்கு எதிரான டி-20 தொடரை கைப்பற்றியது இந்திய அணி. புனேயில் நடந்த 4ஆவது டி-20 போட்டியில் 15 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி.
திருச்சியில் தாம் பயின்ற பள்ளியில் நடந்த விழாவில் பங்கேற்ற நடிகர் சிவகார்த்திகேயன். ஆசிரியர்களை போற்றியும் நகைச்சுவையாக மிமிக்ரி செய்தும் கலகலப்பு.