இந்தியா

இசை, தொலைக்காட்சி, தொலைப்பேசி பயன்படுத்த தடை : கிராமத் தலைவர் விதித்த "பஃட்வா"

webteam

செல்போன், டிவி, மியூசிக், லாட்டாரி உள்ளிட்ட எதையும் மக்கள் பயன்படுத்தக்கூடாது என ஊர்த்தலைவர் விதித்த கட்டுப்பாடுகள் விநோத செயல் மேற்கு வங்கத்தில் நிகழ்ந்துள்ளது.

மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதபாத் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் இஸ்லாமிய முறைப்படி உள்ள சட்டம் ‘ஃபட்வா’ என்று கிராமத் தலைவர் ஒருவர் விநோத கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். அவர் விதித்துள்ள கட்டுப்பாடுகளின்படி, மியூசிக், டிவி, ஸ்மார்ட்போன், கம்ப்யூட்டர், கேரம் போர்டு, திரைப்படங்கள், லாட்டரி, மது விற்பது மற்றும் குடிப்பது ஆகியவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி முதல் இந்த கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்திருப்பதாக அங்கு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அத்துடன் கட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்கு அபராதங்கள் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. மியூசிக், டிவி, செல்போன் மற்றும் கம்ப்யூட்டர் பயன்படுத்தினால் ரூ.1000 அபராதம் என்றும், கேரம் போர்டு விளையாடினால் ரூ.500 அபராதம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லட்டாரி வாங்கினால் ரூ.2000 அபராதம் என்றும், விற்றால் ரூ.7,000 அபராதம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று மது குடிப்பவர்களுக்கு ரூ.2000 அபராமும், விற்பவர்களுக்கு ரூ7,000 அபராமும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக 8 தோப்புக்கரணங்கள் போட வேண்டும் எனப்பட்டுள்ளது. இந்த விநோத கட்டுப்பாடுகள் குறித்த தகவல்கள் வெளியாகி மேற்கு வங்கத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.