ராஜஸ்தானில் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த பெண்ணை, தந்தையே தீ வைத்து எரித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா மாவட்டத்தை சேர்ந்த பெண் ஷீமா. 18 வயதான இப்பெண்ணுக்கு, அவரது குடும்பத்தார் கல்யாண ஏற்பாடு செய்துள்ளனர். ஆனால் திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளாமல் சீமா மறுப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து கட்டாயப்படுத்தியும் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த தந்தை, சீமாவை தீ வைத்து எரித்துள்ளார். இதில் உடல் முழுவதும் தீயால் கருகிய பெண், பான்ஸாரவில் உள்ள எம்.ஜி. மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார், தந்தையை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.