இந்தியா

2021 முதல் M மற்றும் N கேட்டகிரி 4 சக்கர வாகனங்களுக்கும் பாஸ்ட் டேக் கட்டாயம் தேவை

EllusamyKarthik

இந்திய சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணத்தை டிஜிட்டல் முறையில் வசூலிப்பதற்காக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் பாஸ்ட் டேக் நடைமுறையை கொண்டு வந்தது.

பெரும்பாலான சுங்கச்சாவடிகளில் இந்த முறையில் கட்டணம் வசூலிக்கப்பட்டு வரும் நிலையில் 2017 டிசம்பர் 1க்கு முன்னதாக பதிவு செய்யப்பட M மற்றும் N கேட்டகிரி நான்கு சக்கர வாகனங்களுக்கும் வரும் 2021 ஜனவரி 1 முதல் பாஸ்ட் டேக் கட்டாயம் தேவை என தெரிவித்துள்ளது.

அதற்காக இரண்டு மாத காலம் வாகன உரிமையாளர்களுக்கு அவசியம் கொடுப்பதாகவும் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

100 சதவிகிதம் சுங்கக் கட்டணம் டிஜிட்டலில் வசூலிக்கப்படுவதை உறுதி செய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.