உச்சநீதிமன்றத்தில் மிக கடுமையாக கொரோனா பரவியுள்ளதால் தற்போது வரை உச்ச நீதிமன்றத்தின் 8 நீதிபதிகள் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.
கொரோனா 3-வது அலை, முதல் இரண்டு அலைகளை ஒப்பிடும்போது கடுமையாக இல்லை என்றாலும் அதன் பரவும் வேகம் மிக மிக அதிகமாக இருக்கிறது. அதுவும் தலைநகர் டெல்லியில் பரவல் வேகம் மிக அதிகமாக இருக்கிறது.
இதனையடுத்து கடந்த மாதம் முதலே உச்சநீதிமன்றம் முழுமையாக காணொலி காட்சி வாயிலாக விசாரணைக்கு மாறியது. இதுவரை 3-வது அலையில் மட்டும் 10 நீதிபதிகளுக்கு தொற்று உறுதியாகி இருக்கிறது. இந்நிலையல், இரண்டு பேர் குணமடைந்து விட்டனர் எனினும் மீதமுள்ள 8 பேர் தற்போது தங்களது வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உச்ச நீதிமன்றத்தின் ஊழியர்களை பொறுத்தவரை 400-ல் இருந்து 1200 பேர் வரை சமீபத்தில் தொற்றுக்கு ஆளாகி இருக்கலாம் என தகவல்கள் சொல்லப்படுகிறது. வழக்கறிஞர்கள் அவர்களுடைய உதவியாளர்கள் உள்ளிட்டோரும் பாதிக்கப்படுவதால் நீதிமன்ற நடவடிக்கைகள் தடைபட்டுள்ளது.
இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் இருந்து எடுக்கப்படும் கொரோனா பரிசோதனைகளில் 30 சதவிகிதம் பாசிட்டிவ் என்ற முடிவை கொடுத்து வருவதாகவும் சொல்லப்படுகிறது