இந்தியா

“பேச்சுவார்த்தையில் முன்னேற்றமில்லை” - 7வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்

“பேச்சுவார்த்தையில் முன்னேற்றமில்லை” - 7வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்

webteam

மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் முன்னேற்றமில்லாததால் டெல்லியில் விவசாயிகள் 7வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் நடத்தும் போராட்டம் 7வது நாளை எட்டியுள்ளது. நேற்றைய தினம் மத்திய அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் இன்று விவசாயிகள் தங்கள் போராட்டங்களை பல இடங்களில் தீவிரப்படுத்தியுள்ளனர்.

குறிப்பாக , டெல்லி - உத்தரப் பிரதேசம் எல்லையாக இருக்கக்கூடிய காஜிபூர் பகுதியில் விவசாயிகள் டெல்லிக்குள் நுழையும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களையும் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையடுத்து மத்திய அரசின் சார்பில் நாளைய தினமும் விவசாய சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளது. இதற்காக இன்றைய தினத்திற்குள் விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை எழுத்துப்பூர்வமாக அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்னென்ன அம்சங்கள் தங்களுக்கு பாதகமாக இருக்கிறது என்பது குறித்து விவசாய சங்க பிரதிநிதிகள் விவசாயிகளுடன் கலந்தாலோசித்து எழுத்துபூர்வமாக தாக்கல் செய்ய உள்ளனர்.