இந்தியா

300 நாள்களைக் கடந்தது டெல்லி விவசாயிகள் போராட்டம்

JustinDurai
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் மேற்கொண்டு வரும் போராட்டம் 300 நாள்களைக் கடந்துள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்த 3 புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யுமாறு, நாடு முழுவதும் பல்வேறு மாநில விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் மேற்கொண்டுள்ள போராட்டம் நேற்றுடன் 300 நாள்களை நிறைவு செய்துள்ளது.
இதுபற்றி சம்யுக்த கிசான் மோர்ச்சா அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், டெல்லி எல்லையில் லட்சக்கணக்கான விவசாயிகள் அமைதியாக நடத்தி வரும் அறப்போர் 300 நாள்களைக் கடந்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விவசாயிகளின் கோரிக்கை தெளிவாகத் தெரிந்தாலும் மத்திய அரசு அவற்றை ஏற்க மறுப்பதாகக் குறிப்பிட்டுள்ள அந்த அமைப்பு, கோரிக்கைகளை ஏற்கும் வரை போராட்டம் தொடரும் என்று தெரிவித்துள்ளது. மேலும், வரும் 27 ஆம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் நடத்த இருப்பதாகவும் சம்யுக்த கிசான் மோர்ச்சா அமைப்பு தெரிவித்துள்ளது.