இந்தியா

நஷ்டமோ ஒரு லட்சம்... கிடைத்ததோ ஒரு ரூபாய் : மத்தியப்பிரதேச விவசாயிக்கு நேர்ந்த துயரம்

webteam

கோப்புப் படம் 

விவசாயிகள் கடக்கக்கூடிய பாதை எப்போதும் கரடுமுரடானதுதான். தற்போது விவசாய மசோதாக்கள் பற்றிய விவாதங்களும் தொடரும் நிலையில், மத்தியப் பிரதேசத்தில் ஒரு விவசாயிக்கு லட்ச ரூபாய் மதிப்பிலான பயிர் நஷ்டத்திற்கு ஒரு ரூபாய் மட்டும் அரசு வழங்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் விவசாயிகள் பலரும் தங்களுக்கான பயிர்க் காப்பீட்டை மாநில அரசு முறையாக வழங்கவில்லை என குற்றம்சாட்டிவருகின்றனர். இதுவரை அந்த மாநிலத்தில் 22 லட்சம் விவசாயிகளுக்கு பயிர்க்காப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

கோப்புப் படம் 

பேதுல் பகுதியைச் சேர்ந்த விவசாயி புரான்லால், இரண்டரை ஏக்கர் நிலத்தில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பில் நஷ்டமடைந்தார். ஆனால் அவருக்குக் கிடைத்தது என்னவோ வெறும் ஒரு ரூபாய் மட்டும்தான். அவரைப் போல மற்ற இருவருக்கு 70 ரூபாய் மற்றும் 92 ரூபாய் வங்கிக்கணக்கில் வந்துள்ளது.

இதுதொடர்பாகப் பேசிய மாநில அதிகாரிகள், பல விவசாயிகளுக்கு ரூ. 200க்கும் குறைவாகக் கிடைத்துள்ளதாகவும், இதற்கு விளக்கம் கேட்டு சம்பந்தப்பட்ட இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்தனர்.