டெல்லியில் போக்குவரத்துறை சார்பாக நடத்தப்பட்ட இ-ஏலத்தில் "0001" என்ற வண்டி எண் ரூ.16லட்சத்திற்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.
டெல்லி அரசு சார்பாக ஃபேன்சி நம்பர்கள் கொண்ட வண்டி எண்கள் கடந்த 2014ம் ஆண்டு முதல் இ-ஏலம் முறையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நகரப்பகுதியில் வாழும் செல்வந்தர்கள், தொழிலதிபர்கள் மற்றும் மக்கள் சேவையில் உள்ள நிறுவனத்தினர் இவ்வாறு ஃபேன்சி வண்டி எண்களை பெறுவதற்கு பெரும் போட்டி போட்டு வருகின்றனர். இந்நிலைியல் "0001" என்ற வண்டி எண் போக்குவரத்து துறை சார்பாக ஏலம் விடப்பட்டது. இந்த இ-ஏலத்தில் 30க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற நிலையில், பாம் லேன்ட் என்ற தனியார் நிறுவனம் 16 லட்சம் ரூபாய்க்கு இந்த எண்ணை ஏலம் எடுத்துள்ளது. இ-ஏலம் முறை அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து இவ்வளவு பெரிய தொகைக்கு இதுவரை யாரும் ஏலம் எடுத்ததில்லை என டெல்லி போக்குவரத்து கழகத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவ்வாறான ஃபேன்சி நம்பர்களை வைத்திருப்பது சமூகத்தில் பெரும் அந்தஸ்தை தரும் என்ற நம்பிக்கையே இவ்வளவு லட்சங்களை செலவு செய்ய அவர்களை தூண்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.