உத்தரப்பிரதேசத்தில் தூய்மை இந்தியா திட்டத்திற்கான பொதுக் கழிவறையை அங்குள்ள ஒரு குடும்பத்தார் சமையல் அறையாக பயன்படுத்தி வந்துள்ளனர்.
உத்தரப்பிரதேசத்தின் பாராபங்கி மாவட்டத்தில் உள்ள அகன்பூர் என்ற கிராமத்தில் தூய்மை இந்தியா திட்டத்திற்கான பொதுக் கழிவறை கட்டப்பட்டது. இதனை கழிவறையாக பயன்படுத்தாமல் கடந்த ஓராண்டாக ராம் பிரகாஷ் என்பவரின் குடும்பத்தினர் சமையல் அறையாக பயன்படுத்தி வந்துள்ளனர். தங்களுக்கு வீடு ஒதுக்கப்படாததால் பொதுக்கழிப்பறையை சமையலறையாக பயன்படுத்தியதாக அவர் கூறியுள்ளார்.
வீடு வசதி வேண்டி தங்களுக்கு எந்த தகவலும் வரவில்லை என்று கூறியிருக்கும் மாவட்ட ஆட்சியர், பிரகாஷ் விண்ணப்பித்தால் அவருக்கு தங்குமிட வசதி செய்து கொடுக்கப்படும் எனவும், இது தொடர்பாக அதிகாரிகளிடம் உரிய விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். அதேவேளையில் பிரகாஷ்க்கு எதிராக புகார் வந்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.