மத்தியப் பிரதேச மாநிலத்தில் இந்தூர் நகரில் தன் மனைவி குழந்தையுடன் ஒருவர் பணம் எடுக்க சென்றுள்ளர். அங்கு பணம் எடுக்கு சமையத்தில் சிவப்பு நிற ஆடை அணிந்து, முகமூடியுடன் திருடன் ஒருவன் ஏடிஎம் அறைக்குள் நுழைந்துவிடுகிறான். உடனே அவன் கையில் துப்பாக்கியை எடுத்து பணம் எடுக்க வந்த தம்பதியரை மிரட்டுகிறான். மேலும் பணம் எடுக்க வந்தவரின் பர்ஸில் இருந்த பணம் அனைத்தையும் அபகரித்துக் கொள்கிறான்.
அந்தப் பணம் போதாமல் அவரது குழந்தையின் தலையில் துப்பாக்கியை வைத்து ஏடிஎம்யில் பணம் எடுத்து தருமாறு மீண்டும் தந்தையை மிரட்டுகிறான். அந்தக் காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன. அந்த வீடியோ காண்பவர்கள் நெஞ்சை பதைப்பதைக்க வைக்கிறது. செய்வது அறியாத தவித்த அக்குழந்தையின் தந்தை பர்ஸில் இருக்கும் தனது ஏடிஎம் கார்டை எடுத்து தன் கணக்கில் இருந்த முழுப் பணத்தையும் எடுத்து திருடனிடம் கொடுக்கிறார். அக்காட்சி அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகிவுள்ளது. தற்சமயம் அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரகாகி வருகிறது.