இந்தியா

கொரோனாவால் உயிரிழந்த பத்திரிகையாளர்களின் குடும்பத்திற்கு ரூ.10லட்சம் நிதி: யோகி ஆதித்யநாத்

கொரோனாவால் உயிரிழந்த பத்திரிகையாளர்களின் குடும்பத்திற்கு ரூ.10லட்சம் நிதி: யோகி ஆதித்யநாத்

Veeramani

உத்தரபிரதேசத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த பத்திரிகையாளர்களின் குடும்பத்திற்கு 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்திருக்கிறார்

இந்தி பத்திரிகை தினத்தை முன்னிட்டு, கோவிட் -19 காரணமாக இறந்த பத்திரிகையாளர்களின் குடும்பங்களுக்கு உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்  ரூ.10 லட்சம் நிதியுதவியை அறிவித்துள்ளார். மேலும், "சுதந்திர போராட்டம் முதல் தற்போது வரை இந்தி பத்திரிகை, சமூக விழிப்புணர்வு மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்புவதில் முன்னோடியான பங்களிப்பைக் கொண்டுள்ளது. இந்தி பத்திரிகை தினத்தன்று அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்" என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் ட்வீட் செய்துள்ளார்.