இந்தியா

முத்திரைத்தாள் மோசடி வழக்கில் தெல்ஹி விடுதலை

முத்திரைத்தாள் மோசடி வழக்கில் தெல்ஹி விடுதலை

webteam

போலி முத்திரைத் தாள் மோசடி வழக்கில் மறைந்த அப்துல் கரீம் தெல்ஹி உட்பட எட்டு பேரை நாசிக் செஷன்ஸ் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

போலியாக முத்திரைத் தாள் அச்சடித்து விற்று இருபதாயிரம் கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் அப்துல் கரீம் தெல்ஹி என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரம் அப்போது இந்தியா முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்டது. 

இந்த வழக்கில், தெல்ஹி உட்பட எட்டு பேர் மீது நாசிக் செஷன்ஸ் நீதிமன்றத்தில் 2004 ஆம் ஆண்டு சி.பி.ஐ., குற்றப்பத்திரிகை பதிவு செய்தது. இதையடுத்து பல்வேறு ஊழல் வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்பட்ட தெல்ஹிக்கு 2007ஆம் ஆண்டு முப்பதாண்டு கடுங்காவல் சிறைத்தண்ட னை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அதன்படி பெங்களூர்ச் சிறையில் அடைக்கப்பட்டிருந்ததெல்ஹி, கடந்த ஆண்டு அக்டோபரில் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் உயிரி ழந்தார். இந்நிலையில் இந்த வழக்கில் போதிய ஆதாரம் இல்லை என்று கூறி, தெல்ஹி உட்பட எட்டு பேரை நாசிக்கில் உள்ள செஷன்ஸ் நீதிமன்றம் நேற்று விடுவித்தது.