இந்தியா

நிரவ் மோடி கடன் தானே.. நாங்களே கட்டுறோம் - மக்கள் பணத்தை இறைக்கும் பஞ்சாப் வங்கி

நிரவ் மோடி கடன் தானே.. நாங்களே கட்டுறோம் - மக்கள் பணத்தை இறைக்கும் பஞ்சாப் வங்கி

rajakannan

மற்ற வங்கிகளில் நிரவ் மோடி மோசடி செய்த கடன்களை செலுத்த பஞ்சாப் நேஷனல் வங்கி முடிவு செய்துள்ளது. 

தொழிலதிபர் நிரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியில் பெற்ற உத்தரவாதக் கடித்தத்தின் அடிப்படையில் (Letter of Undertaking) மற்ற வங்கிகளில் கடன் பெற்றுள்ளார். அதாவது, நிரவ் மோடி மிகவும் நம்பிக்கைக்குரியவர், அவருக்கு நம்பி கடன் கொடுக்கலாம், அதற்கு நாங்கள் உறுதி அளிக்கிறோம் என்று எழுத்துப்பூர்வமாக கொடுப்பது தான் உத்தரவாதக் கடிதம். இந்த கடிதத்தை பயன்படுத்தி உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள வங்கிகளில் நிரவ் மோடி சுமார் 6 ஆயிரம் கோடி கடன் வாங்கியுள்ளார். இந்த கடனை அவர் திருப்பி செலுத்தவில்லை.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 12 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்த புகாரில் நீரவ் மோடியும் அவரது உறவினர் மெஹுல் சொக்சியும் வெளிநாட்டுக்கு தப்பிவிட்டனர். அவர்களுக்கு நீதிமன்றம் மூலம் ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்டு தேடப்பட்டு வருகின்றனர்.  

இந்நிலையில், மற்ற வங்கிகளில் உத்தரவாதக் கடித்தத்தின் மூலம் நிரவ் மோடி வாங்கிய கடனை திருப்பி செலுத்த, பஞ்சாப் நேஷனல் வங்கி முடிவு செய்துள்ளது. தங்கள் வங்கி மீதுள்ள நம்பிக்கையை தக்க வைத்துக் கொள்ள மார்ச் 31ம் தேதிக்குள் பணத்தை மற்ற வங்கிகளில் செலுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.