இந்தியா

தேவை அதிகரிப்பை பயன்படுத்தி மோசடி: ஹரியானாவில் பறிமுதல் செய்யப்பட்ட போலி கிருமிநாசினி

தேவை அதிகரிப்பை பயன்படுத்தி மோசடி: ஹரியானாவில் பறிமுதல் செய்யப்பட்ட போலி கிருமிநாசினி

webteam

ஹரியானாவில் போலியாக தயாரிக்கப்பட்ட ஐந்தாயிரம் பாட்டில் கிருமிநாசினிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கொரோனா தொற்று கைகள் மூலம் மூச்சுக்குழல் வழியாக உடலுக்குள் நுழைந்துவிடும் என்பதால் கைகளை அடிக்கடி கழுவ வேண்டும் என்பது பிரதான அறிவுரையாக உள்ளது. அதேபோல் வெளியில் பயணம் செய்வோர் கைகளில் தேய்த்து பயன்படுத்தும் கிருமிநாசினியை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

இதனால் பலரும் hand sanitizer என்ற கிருமி நாசினியை பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். தேவை அதிகரித்துள்ள நிலையில் கிருமிநாசினியின் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ஹரியானாவில் போலியாக தயாரிக்கப்பட்ட ஐந்தாயிரம் பாட்டில் கிருமிநாசினிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ஹரியானாவின் குருகிராமில் உள்ள எண்ணெய் தயாரிக்கும் நிறுவனம், இந்த போலிகளை தயாரித்திருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

கிருமிநாசினிகளுக்கான பாட்டிலில் அவற்றை போன்றே நிறம் கொண்ட திரவத்தை நிரப்பி விற்பனை செய்ததும் தெரியவந்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்தால் கிருமிநாசினிகளின் தேவை அதிகரித்த நிலையில் இதை சாதகமாக பயன்படுத்தி போலிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.