இந்தியா

செய்திச் சேவையில் களமிறங்கும் ஃபேஸ்புக்...!

செய்திச் சேவையில் களமிறங்கும் ஃபேஸ்புக்...!

webteam

இந்தியாவில் முன்னணி செய்தி நிறுவனங்களுடன் உடன்பட்டு நம்பகமான தகவல்களைத் தர ஃபேஸ்புக்  நிறுவனம் முடிவு செய்துள்ளது.

ஃபேஸ்புக் நிறுவனம் இனி நேரடியாகவே செய்தி சேவையை வழங்க உள்ளது. இதற்காக சிஎன்என், ஃபாக்ஸ் நியூஸ், ஏபிசி நியூஸ் உள்ளிட்ட முன்னணி செய்தி நிறுவனங்களுடன் உடன்பட்டு கையெழுத்தாக இருக்கிறது.

பல்வேறு தவறான தகவல்கள் சமூக தளங்களில் பரவிவரும் நிலையில் நம்பகமான செய்திகளை வழங்க தங்கள் முடிவு உதவிகரமாக இருக்கும் என ஃபேஸ்புக் தெரிவித்தள்ளது. உடனுக்குடன் தகவல்களை தரும் பிரேக்கிங் செய்திகளை வெளியிட வசதியாக இந்தியா உள்ளிட்ட நாடுகளில் உள்ள 80 செய்தி நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட உள்ளதாக ஃபேஸ்புக் செய்திப் பிரிவின் தலைவர் அலெக்ஸ் ஹார்டிமேன் தெரிவித்தார்.