பெண்கள் மற்றும் குழந்தைக்களுக்கு எதிரான குற்றங்களில் குற்றவாளிகளை பிடிக்க ஃபேஸ்புக் நிறுவனம் டெல்லி காவல்துறைக்கு உதவி செய்ய உள்ளது.
உலகின் மிகப்பெரிய சமூக வலைத்தளமான ஃபேஸ்புக் தொடங்கப்பட்டு 15 வருடங்கள் நிறைவடைகின்றன. சமூக வலைத்தள செயலிகள் உலகம் முழுவதும் தகவல் பரிமாற்ற தொழில்நுட்பத்தில் முக்கிய பங்கு வகிப்பது ஃபேஸ்புக் தான். இந்தியாவில் அதிக மக்கள் பயன்படுத்தும் தகவல் பரிமாற்ற செயலியாகவும் ஃபேஸ்புக் விளங்குகிறது. கடந்த ஆண்டு பெரும் சர்ச்சைக்குளான ஃபேஸ்புக், அதன்பின்னர் பல புதிய அப்டேட்களுடன் உள்ளது.
இந்நிலையில் ஃபேஸ்புக் இந்தியா மற்றும் டெல்லி காவல்துறைக்கு இடையே நடைபெற்ற கூட்டத்தில், குற்றவாளிகள் குற்றத்திற்காக பயன்படுத்திய chat விவரங்களை வழங்க ஃபேஸ்புக் நிறுவனம் சம்மதம் தெரிவித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக பெண்கள், குழந்தைகள் மீது நடத்தப்பட்ட குற்றங்களில், பெரும்பாலும் சமூக வலைதளங்களின் பயன்பாடு உள்ளதால் ஆதரங்களை திரட்ட கடினமாக உள்ளதாக காவல்துறை கூறியுள்ளது. இதனையடுத்து குற்றவாளிகளின் தனிப்பட்ட chat விவரங்களை அளிக்க ஃபேஸ்புக் சம்மதம் தெரிவித்துள்ளது.