இந்தியா

திடீரென முடங்கிய ஃபேஸ்புக்...!

திடீரென முடங்கிய ஃபேஸ்புக்...!

Rasus

சமூக வலைத்தளங்களில் ஒன்றான ஃபேஸ்புக் திடீரென முடங்கியதால் அதன் பயனாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

சமூக வலைத்தளங்களில் ஒன்றான ஃபேஸ்புக் இணையதளத்தை நாள்தோறும் ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஃபேஸ்புக் திடீரென முடங்கியதால் அதன் பயனாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சிலருக்கு ஃபேஸ்புக் பக்கத்திற்குள் செல்லவே முடியவில்லை. சிலரால் ஃபேஸ்புக் பக்கத்திற்குள் செல்ல முடிந்தாலும், பதிவுகளையோ, புகைப்படத்தையோ பதிவேற்றம் செய்ய முடியவில்லை.

ஃபேஸ்புக் இணையதளம் திடீரென முடங்கியதையடுத்து, #facebookdown என்ற ஹேஷ்டேக்கை ட்விட்டரில் பலரும் பதிவிட்டனர். இதனிடையே சிறிது நேரத்திலேயே அது சரிசெய்யப்பட்டு, ஃபேஸ்புக் வழக்கம்போல வேலை செய்ய ஆரம்பித்தது.