இந்தியா

இந்தியாவில் அதீத ஏழ்மை 12% குறைந்துள்ளது: உலக வங்கி ஆய்வறிக்கை

Veeramani

இந்தியாவில் ஏழ்மை வெகுவாக குறைந்துள்ளதாக உலக வங்கியின் ஆய்வறிக்கை கூறுகிறது

இந்தியாவில் மக்களின் ஏழ்மை நிலை குறித்த ஆய்வறிக்கையை உலக வங்கி வெளியிட்டுள்ளது. இதில் 2011ம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை அதீத ஏழ்மை 12 சதவிகிதம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2011ஆம் ஆண்டு 22.5 சதவிகிதம் பேர் அதீத ஏழ்மை நிலையில் வாடிய நிலையில் 2019இல் அது 10.2 சதவிகிதம் ஆக குறைந்ததாக உலக வங்கி கூறியுள்ளது.

ஏழ்மை நிலை குறையும் போக்கு கிராமங்களில் அதிகமாக உள்ளதாக தெரிவித்துள்ள உலக வங்கி, 2011இல் கிராமங்களில் 26.3 சதவிகிதம் பேர் வறுமையில் வாடிய நிலையில் 2019இல் 11.6 சதவிகிதமாக குறைந்துள்ளதாக கூறியுள்ளது. நகரப்பகுதிகளில் 14.2 சதவிகிதமாக இருந்த வறுமை 6.3 சதவிகிதமாக குறைந்துள்ளதாக ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



தினசரி ஒருவர் 1.9 டாலர், அதாவது 145 ரூபாய்க்கு கீழான வருமானத்தில் வாழும் நிலை இருந்தால் அவர் அதீத ஏழ்மை நிலையில் இருக்கிறார் என்பது உலக வங்கியின் வரையறையாக உள்ளது. மக்களை அதீத ஏழ்மை நிலையிலிருந்து இந்தியா ஏறக்குறைய மீட்டு விட்டது ஐஎம்எஃப் ஆய்வறிக்கை அண்மையில் கூறியிருந்தது