இந்தியா

திடீர் பிரேக் போட்ட எக்ஸ்பிரஸ் ரயில்: 10 பேர் காயம்!

திடீர் பிரேக் போட்ட எக்ஸ்பிரஸ் ரயில்: 10 பேர் காயம்!

webteam

வேகமாக சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில், திடீர் பிரேக் போட்டதால் 10 பயணிகள் காயமடைந்தனர்.

சண்டிகர்- புதுடெல்லி இடையே ஹிமாலயன் குயின் என்ற எக்ஸ்பிரஸ் ஓடி வருகிறது. இந்த ரயில் சண்டிகரில் இருந்து டெல்லி நோக்கி நேற்று புறப்பட்டது. ஹரியானாவின் காரவ்ண்டா என்ற ஊரின் அருகே நள்ளிரவில் வந்துகொண்டிருந்தபோது, ஸ்டேஷன் மாஸ்டர் மெதுவாக வரும்படி எச்சரிக்கை செய்தாராம். இதையடுத்து வேகமாக வந்த ரயிலின் டிரைவர், திடீர் பிரேக் போட்டார். இதனால் தூங்கிக்கொண்டிருந்த பயணிகள், ரயில் பெட்டிக்குள் தவறி விழுந்தனர். இதில் 10 பயணிகள் காயமடைந்தனர். அவர்களுக்கு முதலுதவி செய்யப்பட்டது. ரயிலை இப்படி திடீர் பிரேக் போட்டு நிறுத்தியதற்கு பயணிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.