உத்தரப்பிரதேச மாநிலம் அமேதியில் எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நோக்கி சென்ற அகல்தகாத் எக்ஸ்பிரஸ் ரயிலின் ஒரு பெட்டியின் கழிவறையில் சந்தேகத்துக்கு இடமான பொருள் இருப்பதாக வந்த தகவலை அடுத்து உடனடியாக காவல்துறையினர் அங்கு சோதனையில் ஈடுபட்டனர். விசாரணையில், அது வெடிபொருள் என தெரியவந்தது. மேலும் அங்கிருந்த கடிதத்தில் காஷ்மீர் பயங்கரவாதி அபு துஜானா சுட்டுக்கொல்லப்பட்டதை கண்டித்து வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. வெடிபொருள் கண்டெடுக்கப்பட்டதையடுத்து ரயிலில் இருந்த பயணிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.