ரயில் விபத்து
ரயில் விபத்து file image
இந்தியா

23 விநாடிகளில் மாறிய வேகம்.. விளைந்த ஆபத்து.. விபத்து நடந்தது இப்படிதான்! வரைபடம் மூலம் விளக்கம்

PT WEB

ஒடிசாவின் பாலசோர் மாவட்டம், பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே நேற்று (ஜூன் 2) இரவு 7.30 மணி அளவில் பெங்களூரு - ஹவுரா அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில், ஷாலிமார் - சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் ஆகியவை ஒன்றோடு ஒன்று மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் தற்போது வரை 233 பேர் உயிரிழந்து இருப்பதாகவும், 900க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து இருப்பதாகவும் தற்போதைய தகவல் தெரிவிக்கிறது.

ஒடிசாவில் நடைபெற்ற ரயில் விபத்திற்கான காரணம் குறித்து அறியப்பட்டு வருகிறது. இதுகுறித்து பல்வேறு தகவல்கள் வரும் நிலையில், விபத்து எவ்வாறு நடைபெற்றிருக்கும் என்பது குறித்து இந்த வீடியோவில் அறிந்துகொள்வோம்.