சத்தீஸ்கரில் பாரதிய ஜனதா கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சி இடையே இழுபறி ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும், அதேசமயம் தெலங்கானவில் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி ஆட்சியை பிடிக்கும் எனவும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
சத்தீஸ்கர் மாநிலத்தில் மொத்தமாக 90 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இங்கு கடந்த 2003-ஆம் ஆண்டு முதல் 15 ஆண்டுகாலமாக பாரதிய ஜனதா கட்சி ஆட்சி நடத்தி வருகிறது. இந்நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள், இங்கு பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே இழுபறி நீடிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கின்றன.
சத்தீஸ்கர்
மொத்த தொகுதிகள்- 90
ஆட்சியமைக்க தேவையான தொகுதிகள்- 46
டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பின்படி
பாஜக- 46 இடங்கள்
காங்கிரஸ்- 35 இடங்கள்
ரிபப்ளிக் டிவி கருத்துக் கணிப்பின்படி
பாஜக- 44 இடங்கள்
காங்கிரஸ்- 40 இடங்கள்
மற்றவை- 6 இடங்கள்
சிவோட்டர் கருத்துக் கணிப்பின்படி
பாஜக- 39 இடங்கள்
காங்கிரஸ்- 46 இடங்கள்
மற்றவை- 5 இடங்கள்
--------------
தெலங்கானா மொத்த தொகுதிகள் 119
ஆட்சியமைக்க தேவையான தொகுதிகள்- 60
டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பின்படி
தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி- 66 இடங்கள்
காங்கிரஸ்- 37 இடங்கள்
பாஜக- 7 இடங்கள்
ரிபப்ளிக் டிவி கருத்துக் கணிப்பின்படி
தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி- 75 முதல் 85 தொகுதிகள்
காங்கிரஸ்- 25 முதல் 35 தொகுதிகள்
பாஜக- 2 முதல் 3 தொகுதிகள்.