இந்தியா

கலால் வரியை உயர்த்தியது மத்திய அரசு: பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்

கலால் வரியை உயர்த்தியது மத்திய அரசு: பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்

webteam

பெட்ரோல், டீசல் விலை மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ.3 மத்திய அரசு உயர்த்தியுள்ளது 

கச்சா எண்ணெய் விலையைக் கட்டுப்பாட்டில் வைக்கும் எண்ணெய் வள நாடுகளின் அமைப்பான ஒபெக்கின் ஒப்பந்தத்தை ரஷ்யா நிராகரித்ததன் காரணமாக கச்சா எண்ணெய் விலை சுமார் 30 சதவிகிதம் வரை சரிவு கண்டது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக எரிபொருளுக்கான தேவை குறைந்த நிலையில், கச்சா எண்ணெய்யின் தேவையைக் காட்டிலும் உற்பத்தி அதிகரித்துள்ளது. எனவே சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில், பெட்ரோல், டீசல் விலையை குறையும் என மக்கள் எதிர்பார்த்தனர்.

மு.க.ஸ்டாலின், ராகுல்காந்தி போன்ற அரசியல் கட்சித் தலைவர்களும் பெட்ரோல் விலை குறையுமா என மத்திய அரசிடம் கேள்வி எழுப்பினர். இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலை மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தியுள்ளது

கலால் வரியை மத்திய அரசு அதிகரித்துள்ளதால் பெட்ரோல் டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. விலை குறையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது கலால் வரியை மத்திய அரசு உயர்த்தியுள்ளது அதிர்ச்சி அளிப்பதாக வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர்.