பீகாரில் தேர்வு அறையில் மோசடி செய்ததாக துப்பாக்கிச் சூடு: மாணவர் சுட்டுக் கொல்லப்பட்டார், மேலும் இருவர் காயமடைந்தனர்.
பீகார் மாநிலம் சசாரத் என்ற பகுதியில் கல்லூரி மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியதில் ஒரு மாணவர் சுட்டு கொல்லப்பட்டார் இருவர் காயமடைந்துள்ளனர்.
மேலைநாடுகளில் துப்பாக்கி கலாச்சாரம் அதிகரிக்கும் அதே வேளையில் இந்தியாவிலும் துப்பாக்கி கலாச்சாரம் தலைதூக்க துவங்கியுள்ளது. இந்தியாவில் பாதுகாப்புக்கருதி பலரும் லைசென்ஸ் பெற்று துப்பாக்கியை பயன்படுத்துவது அதிகரித்து வந்தாலும், மாணவர்களிடையே பரவி வரும் துப்பாக்கி கலாச்சாரம் வேதனை அளிக்கும் விதமாக உள்ளது.
பீகார் மாநிலம் சசாரத் பகுதி ஒன்றில் இருக்கும் கல்லூரியில் மாணவர்களுக்கிடையே தேர்வு நடைப்பெற்று வருகிறது. இத்தேர்வின் போது இரு மாணவர்களுக்கிடையே மோதல் நடந்துள்ளது. இந்த மோதலானது ஒரு கட்டத்தில் வன்முறையாக மாறியதில் மாணவர்களிடையே துப்பாக்கிசூடும் நடந்துள்ளது இதில் ஒரு மாணவர் துப்பாக்கி சூட்டில் இறந்துவிட மற்ற இருவரில் ஒருவருக்கு முதுகிலும் மற்றொருவருக்கு காலிலும் குண்டு பாய்ந்து காயமடைந்துள்ளனர்.
இதில் பாதிக்கப்பட்ட மாணவர்களின் குடும்பத்தினர் வன்முறையில் ஈடுபட்டனர். இந்த வீடியோவானது தற்பொழுது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த வன்முறையின் போது டயர்கள் எரிந்து போக்குவரத்து முழுவது தடைப்பட்டதால் உள்ளூர்வாசிகளும் போலிசாரும் சாலையில் நிற்பது தெரிந்தது.
இதில் யார் துப்பாக்கி சூடு நடத்தினர்? எதற்காக நடத்தப்பட்டது? இருவருக்குள்ளும் உள்ள பிரச்சனை என்ன? என்ற தகவல் தற்பொழுது வரை தெரியவரவில்லை...இது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.