இந்தியா

மணக்கோலத்தில் தேர்வு எழுதி மாலை மாற்றிய மாணவி !

மணக்கோலத்தில் தேர்வு எழுதி மாலை மாற்றிய மாணவி !

webteam

கர்நாடக மாநிலத்தில் கல்லூரி மாணவி தேர்வு எழுதிய சில மணித்துளிகளில் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

கர்நாடக மாநில மாண்ட்யா பகுதியைச் சேர்ந்தவர் காவ்யா. இவர் அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் இளங்கலை வணிகவியல் படித்து வருகிறார். இந்நிலையில் காவ்யாவுக்கும் அதே மாவட்டத்தை சேர்ந்த லோஹித் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. தேர்வு சமயத்தில் காவ்யா திருமணம் நாள் குறிக்கப்பட்டு விட்டது. ஆனால் காவ்யா தான் கண்டிப்பாக தேர்வில் பங்கேற்பேன் என தனது பெற்றோர்களிடம் தெரிவித்து விட்டார். இரு வீட்டாரும் காவ்யாவும் முடிவுக்கு சம்மதம் தெரிவித்து விட்டனர்.

திருமணத்திற்காக முகூர்த்தம் 11 மணிக்கு குறிக்கப்பட்டிருந்தது. தேர்வு 9.15 - 12.30 மணி வரை நடைபெறும். தேர்வுக்கு முதல் நாள் இரவு தனது திருமண சடங்குகளை  எல்லாம் முறைப்படி முடித்துள்ளார். திருமண நாளன்று மணப்பெண் அலங்காரத்துடன் தேர்வு எழுத சென்றுள்ளார். காவ்யா நன்றாக படிக்கக்கூடிய மாணவி அவர் தனது முந்தைய தேர்வுகளில் மெரிட்டில் தேர்ச்சி பெற்றுள்ளார். 9.15 மணிக்கு ஆரம்பித்த தேர்வை 10.58 முடித்துவிட்டு தேர்வு அறையில் இருந்து மணவறையை நோக்கி பயணமானார். காவ்யாவின் தேர்வும் திருமணமும் சிறப்பாக நடைப்பெற்றது.

வாழ்வின் முக்கியமான இந்த நாளில் அவருக்கு படிப்பின் மீது இருந்த ஆர்வமும் கல்விக்கு அவர் அளித்த மரியாதையும் நினைத்து தேர்வு கண்காணிப்பாளர் பாராட்டும் தெரிவித்தார். திருமண நாளில் தேர்வு எழுத சென்ற காவ்யாவை நண்பர்களும் , உறவினர்களும் வெகுவாக பாராட்டினர்.