இந்தியா

அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு 

webteam

2019ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு, எத்தியோப்பிய நாட்டின் பிரதமர் அபய் அகமது அலிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியோருக்கு நோபல் விருதுகள் அறிவிக்கப்பட்டு வந்தன. இந்த விருதுகளில் மிகவும் உயரியதாக கருதப்படும் அமைதிக்கான நோபல் விருது எத்தியோப்பிய நாட்டின் பிரதமருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அமைதி மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்காகவும், அண்டை நாடான எரித்தியாவுடன் பல ஆண்டுகளாக நிலவிய எல்லை பிரச்னைக்கு தீர்வு காண உறுதியான நடவடிக்கை எடுத்ததற்காகவும் அபய் அகமது அலி அந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே அமைதிக்கான நோபல் விருதுக்கு ஸ்வீடனைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா தன்பர்க், ஜெர்மன் சான்சலர் ஏஞ்சலா மெர்கல், கீரிஸ் பிரதமர் அலெக்சிஸ் சிப்ராஸ், வடக்கு மேசிடோனியா பிரதமர் ஜோரன் ஜேவ் ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது. 

ஏற்கெனவே, இதுவரை பொருளாதாரம், இயற்பியல், வேதியியல், ஆகிய துறைகளுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.