இந்தியா

தனியார் பிஎஃப் டிரஸ்டுகளை இணைக்க திட்டம் - ஈபிஎஃப்ஓ

webteam

சந்தாதாரர்களுக்கு சிறப்பான சேவை வழங்கவும் பல்வேறு சலுகைகளை வழங்கவும் 500 தனியார் பிஎஃப் டிரஸ்டுகளை இணைக்க இபிஎப்ஓ எனும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

கோடி ரூபாய் இபிஎஃப் வைப்புத்தொகை அல்லது 20 உறுப்பினர்கள் கொண்ட தனியார் பிஎஃப் டிரஸ்டுகளை ஈபிஎஃப்ஓ ஆணையத்துடன் இணைக்கப்படும். இதன்மூலம் அதிகபட்ச இபிஎஃப் தொகையை தொழிலாளர் ஆணையம் நிர்வகிக்க முடியும். அதிகபட்ச சந்தாதாரர்களைக் கொண்ட தனியார் பிஎஃப் அறக்கட்டளைகளை இணைப்பதற்கு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டம் 1952 விதியில் சட்டத்திருத்தத்தை தொழிலாளர் அமைச்சகம் கொண்டுவர உள்ளது. இதன்மூலம் தனியார் பிஎஃப் டிரஸ்டுகளின் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் இபிஎஃப் பணத்தை இபிஎஃப்ஓ ஆணையம் நிர்வகிக்க முடியும்.

சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டால், குறைந்தபட்சம் 500 தொழிலாளர்களைக் கொண்ட நிறுவனமே பிஎஃப் டிரஸ்டுகளை நடத்த முடியும். தொழிலாளர்களுடைய இபிஎஃப் நிதி குறைந்தபட்சம் ரூ.100 கோடி இருக்க வேண்டும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.