இந்தியா

மேகதாது அணை குறித்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் பரிசீலனை ?

மேகதாது அணை குறித்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் பரிசீலனை ?

Rasus

மேகதாது அணைக்கு அனுமதி கோரி கர்நாடக அரசு அளித்த மனுவை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் பரிசீலிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கர்நாடக மாநிலம் மேகதாது‌வில் காவிரியின் குறுக்கே அணை கட்டுவதற்கு அம்மாநில அரசு தொடர் முயற்சிகளை எடுத்து வருகிறது. ஆனால், தொடக்கம் முதலே தமிழகம் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அதேசமயம் மேகதாதுவில் அணை கட்டுவதற்கு அனுமதி கோரி சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் கர்நாடக அரசு மனு வழங்கியிருந்தது. பெங்களூரு மற்றும் புறநகர் மக்களின் குடிநீர் தேவையை சமாளிக்கும் வகையில் மேகதாதுவில் அணை கட்டுவது அவசியம் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், வரும் 19-ஆம் தேதி மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நிபுணர் மதிப்பீட்டுக்கு குழு கர்நாடக அரசின் மனுவை பரிசீலிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் தமிழகம், கேரளா,‌ புதுச்சேரி ஆகிய சம்பந்தப்பட்ட மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளக் கூடாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.