இந்தியா

கேரள அரசு போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்: பயணிகள் அவதி

JustinDurai
ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கேரள அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் நள்ளிரவு 12 மணி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அம்மாநில சட்ட விதிகளின்படி 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு நடைமுறைப்படுத்த வேண்டுமென கூறப்படுகிறது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக ஊதிய உயர்வு வழங்கப்படாததால், கேரள மாநில அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கிய போராட்டம் தொடர்ந்து 2 நாட்களுக்கு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள அரசு பேருந்துகள் இயக்கப்படாததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.