பிரபல மூத்த வழங்கறிஞரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ராம் ஜெத்மலானி இன்று காலை காலமானார். அவருக்கு வயது 95.
வயது முதிர்வு காரணமாக உடல்நலமில்லாமல் இருந்த ஜெத்மலானிக்கு கடந்த 2 வாரமாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று காலை காலமானார்.
ராம் ஜெத்மலானி 1923 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14 ஆம் தேதி பாகிஸ்தானின் சிந்த் மாகாணத்தில் உள்ள சிக்கார்பூரில் பிறந்தார். பிரிவினைக்குப் பிறகு மும்பை வந்தது அவரது குடும்பம்.
18 ஆம் வயதிலேயே சட்டப்படிப்பை முடித்த ஜெத்மலா னி, மும்பையில் வழக்கறிஞராக பணியாற்றினார். 1998ஆம் ஆண்டில் வாஜ்பாய் அமைச்சரவையில் சட்டத்துறை அமைச் சராக பதவி வகித்துள்ளார். உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங் களில் முக்கியமான வழக்குகளில் வாதாடி புகழ் பெற்றவர்.
மறைந்த ராம் ஜெத்மலானிக்கு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அஞ்சலி செலுத்தினார்..