இந்தியா

வட்டிக்கு வட்டி வழக்கு: மத்திய அரசுக்கு மேலும் அவகாசம் !

jagadeesh

இஎம்ஐ வட்டிக்கு வட்டி வசூலிப்பதற்கு எதிரான வழக்கில் மத்திய அரசு முடிவெடுக்க கூடுதல் அவகாசம் வழங்கியது உச்சநீதிமன்றம்.

வட்டிக்கு வட்டி வசூல் செய்வதை ரத்து செய்யக்கோரும் வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் விளக்கம் கேட்டது. ஆனால் மத்திய அரசு விளக்கமளிக்காத சூழலில் பல்வேறு கேள்விகளை உச்சநீதிமன்றம் கேட்டது.

இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் கடந்த வாரம் பதிலளித்த ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசு "இஎம்ஐ அவகாசத்தை 2 ஆண்டுகள் வரை கூட நீட்டிக்கலாம்" என தெரிவித்தது. இந்நிலையில் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இஎம்ஐ வட்டிக்கு வட்டி வசூலிப்பதற்கு எதிரான வழக்கில் மத்திய அரசு முடிவெடுக்க கூடுதல் அவகாசம் வழங்கியது உச்சநீதிமன்றம்.

மேலும் ஆகஸ்ட் 31வரை கடன் தொகை செலுத்தாதவர்களை வாராக்கடன் பட்டியலில் சேர்ப்பதற்கான தடை தொடரும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.