elon musk ANI
இந்தியா

எலான் மஸ்க் Vs இந்திய அரசு.. வெடிக்கும் சர்ச்சை.. ஸ்டார்லிங்க் விவகாரத்தில் அடுத்த திருப்பம்!

இந்தியாவில் அதிகாரப்பூர்வமாகச் செயற்கைக்கோள் இணையச் சேவையைத் தொடங்க தேவையான பாதுகாப்பு வழிகாட்டுதல்களையும், அரசு ஒப்புதல்களையும் பெற ஸ்டார்லிங்க் நிறுவனம் தீவிர பேச்சுவார்த்தை நடத்திவருகிறது.

Prakash J

இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் இணைய முடக்கங்களைத் தவிர்ப்பதற்காக்க் கிளர்ச்சிக் குழுக்கள் ஸ்டார்லிங்கைப் பயன்படுத்துவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை எலான் மஸ்க் நிராகரித்துள்ளார். முன்னதாக, இந்தியாவில் மணிப்பூர் போன்ற கலவரப் பகுதிகளில் கிளர்ச்சி அமைப்பினரிடம் ஸ்டார்லிங்க் சாதனங்கள் கைப்பற்றப்பட்டதாகவும், அவை பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் தகவல் பரவியது

இந்தியாவில் அதிகாரப்பூர்வமாகச் செயற்கைக்கோள் இணையச் சேவையைத் தொடங்க தேவையான பாதுகாப்பு வழிகாட்டுதல்களையும், அரசு ஒப்புதல்களையும் பெற ஸ்டார்லிங்க் நிறுவனம் தீவிர பேச்சுவார்த்தை நடத்திவருகிறது. இதற்கிடையே, ”இந்தி்யாவில், தங்களின் சந்தை ஏகபோக ஆதிக்கத்தைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்வதற்காக, சில இந்தியப் பெருமுதலாளிகள் ஸ்டார்லிங்க் சேவையைத் தடுத்து வருகின்றனர். இந்திய சந்தைக்குள் ஸ்டார்லிங்க் நுழைவதைத் தடுப்பது அம்மக்களுக்கு எதிராகச் செய்யப்படும் குற்றம்” என எலான் மஸ்க் கடுமையாகச் சாடியிருந்தார்.

starlink

இதற்கு விளக்கம் அளித்த மத்திய அரசு, “இந்தியாவின் செயற்கைக்கோள் தகவல் தொடர்பு கொள்கை மிகவும் நியாயமானது, வெளிப்படையானது மற்றும் அனைத்து நிறுவனங்களுக்கும் சம வாய்ப்பளிக்கும் பாகுபாடற்ற ஒன்றாகும். இதில் யாருக்கும் சிறப்புச் சலுகையோ அல்லது புறக்கணிப்போ வழங்கப்படவில்லை என்பதால், பாகுபாடு காட்டப்படுவதாகக் கூறுவது ஆதாரமற்றது” எனத் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில்தான், இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் இணைய முடக்கங்களைத் தவிர்ப்பதற்காகக் கிளர்ச்சிக் குழுக்கள் ஸ்டார்லிங்கைப் பயன்படுத்துவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை எலான் மஸ்க் நிராகரித்துள்ளார். இதுகுறித்து அவர், “இந்தியப் பகுதிகளில் கிளர்ச்சிக் குழுவினர் ஸ்டார்லிங்க் இணையத்தைப் பயன்படுத்துவதாக பரவி வரும் தகவல்கள் முற்றிலும் பொய்யானவை. இந்திய எல்லைப் பகுதிக்கு மேலே ஸ்டார்லிங்க் சேவையை வழங்குவதற்கான செயற்கைக்கோள் கற்றைகள் முடக்கப்பட்டே உள்ளன. எனவே, அங்கிருந்து ஸ்டார்லிங்க் பிணையத்தை இணைப்பது தொழில்நுட்ப ரீதியாகச் சாத்தியமில்லை” என அவர் விளக்கியுள்ளார்.

elon musk

முன்னதாக, இந்தியாவில் மணிப்பூர் போன்ற கலவரப் பகுதிகளில் கிளர்ச்சி அமைப்பினரிடம் ஸ்டார்லிங்க் சாதனங்கள் கைப்பற்றப்பட்டதாகவும், அவை பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் தகவல் பரவியது.