இந்தியா

யானைகள் இடம்பெயர்வால் மக்கள் அச்சம்

யானைகள் இடம்பெயர்வால் மக்கள் அச்சம்

webteam

மேற்குவங்க மாநிலம் மேற்கு மிட்னாபூரில் யானைகள் கூட்டம் ஒன்று ஊருக்குள் நுழைந்திருப்பதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். 

வனத்தில் இருந்து யானைகள் கூட்டம் கன்சாபாதி நதியை கடந்து லால்கார் வனப்பகுதிக்குள் நுழைந்துள்ளன. இதனால் அருகாமையில் வசிக்கும் கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். எந்த நேரமும் யானைகள் கூட்டம் தாக்கலாம் என்பதால் ஒவ்வொரு நொடியையும் அச்சத்துடனே கடப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.