தேர்தல் பத்திரம், உச்ச நீதிமன்றம்
தேர்தல் பத்திரம், உச்ச நீதிமன்றம் ட்விட்டர்
இந்தியா

”நரேந்திர மோடியின் ஊழல் கொள்கையின் மற்றுமொரு ஆதாரம்” - தேர்தல் பத்திரம் தீர்ப்பு; தலைவர்கள் வரவேற்பு

Prakash J

தேர்தல் பத்திரம் தொடர்பான செய்திகளே, இன்று ஊடகம் முழுவதும் நிரம்பி வழிகின்றன. அதற்குக் காரணம், உச்ச நீதிமன்றம் இன்று வழங்கிய தீர்ப்புதான். இன்று வழங்கிய தீர்ப்பில், ’தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது’ என தெரிவித்துள்ளது. மேலும் தேர்தல் பத்திரங்கள் வழங்குவதை உடனடியாக நிறுத்துமாறு ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவிற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான தகவல்களை தேர்தல் ஆணையத்திற்கு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

தீர்ப்பை வரவேற்கும் அரசியல் தலைவர்கள்

இந்தத் தீர்ப்பைப் பெரும்பாலான அரசியல் தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.

கபில் சிபல், மூத்த வழக்கறிஞர்

“10 லட்சம் அல்லது 15 லட்சத்திற்காக யாரும் தேர்தல் பத்திரம் கொடுக்கமாட்டார்கள். அது கோடிக்கணக்கில் இருக்கும். எனவே அரசியல் கட்சிக்கு 5000 கோடி நிதி அளித்திருந்தால் பணக்காரர்கள் மட்டுமே அதைச் செய்திருக்க முடியும். மேலும் அவர்கள் செயல்பாட்டில் சில சலுகைகளைப் பெற்றிருக்க வேண்டும் என்று கற்பனை செய்துகொள்ளலாம்”.

ராகுல் காந்தி, காங்கிரஸ் எம்.பி.

”நரேந்திர மோடியின் ஊழல் கொள்கையின் மற்றுமொரு ஆதாரம் உங்கள்முன் வந்துள்ளது. ஊழல் மற்றும் கமிஷன் பெறுவதற்கான ஒரு தடமாக பாஜக தேர்தல் பத்திரங்களை உருவாக்கியது. இன்று இந்த விவகாரம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது”.

’உச்சநீதிமன்றம் சரியாக கூறியுள்ளது’ - ஸ்டாலின்

ஜெயா தாகூர், காங்கிரஸ் தலைவர்

"அரசியல் கட்சியின் நிதி தொடர்பான வெளிப்படைத்தன்மை மற்றும் மக்களின் நலனை இந்த தீர்ப்பு பாதுகாக்கும்”

மு.க.ஸ்டாலின், தமிழக முதல்வர்

“தேர்தல் பத்திரங்கள் திட்டம் அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று உச்சநீதிமன்றம் சரியாக கூறியுள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு வெளிப்படையான தேர்தல் நடைமுறையை உறுதி செய்யும். இந்தத் தீர்ப்பு அனைத்து அரசியல் கட்சிகளுக்கு ஜனநாயகத்தையும் சம நிலையையும் மீட்டெடுத்துள்ளது. இந்த தீர்ப்பு தேர்தல் அமைப்பின் மீதான சாமானியர்களின் நம்பிக்கையையும் உறுதி செய்துள்ளது”.

ப.சிதம்பரம், காங்கிரஸ் மூத்த தலைவர்

”வெளிப்படைத்தன்மை, தகவல் அறியும் உரிமை சட்டத்துக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி உச்சநீதிமன்ற தீர்ப்பு. சமத்துவம், நீதி, நேர்மை, ஜனநாயகத்தின் ஒவ்வொரு விதியையும் மீறியுள்ளது தேர்தல் பத்திர திட்டம். தேர்தல் பத்திரங்கள் மூலம் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் 90% நிதியை பா.ஜ.க. பெற்றது என்ற உண்மை அம்பலமாகியுள்ளது. எந்த கட்சிக்கு, எப்போது, யார் நன்கொடை அளித்தது என்ற விவரத்தை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.அரசியல் கட்சிக்கு தேர்தல் நன்கொடை ஏன் தரப்பட்டது என்று மக்கள் கேள்வி எழுப்புவார்கள்”.

எடப்பாடி பழனிசாமி, அதிமுக பொதுச் செயலாளர்

”தேர்தல் பத்திரங்கள் ரத்து என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை அதிமுக வரவேற்கிறது”.