இந்தியா

தேர்தல் அறிக்கை வெளியிட கட்டுப்பாடு - தேர்தல் ஆணையம் அதிரடி

தேர்தல் அறிக்கை வெளியிட கட்டுப்பாடு - தேர்தல் ஆணையம் அதிரடி

webteam

வாக்குப்பதிவு தொடங்கும் 48 மணி நேரத்திற்குள் அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கையை வெளியிடுவதற்கு தேர்தல் ஆணையம் தடைவிதித்துள்ளது. 

தேர்தல் ஆணையம் பிறப்பித்துள்ள உத்தரவின்படி, தேர்தல் அறிக்கையை வெளியிடுவதும், தேர்தல் நடத்தை விதிகளுக்கு உட்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில், முதல்கட்ட வாக்குப்பதிவு நாளின் போது பாஜக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அது வாக்காளர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறி, காங்கிரஸ் சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. 

எனினும், தேர்தல் அறிக்கை தொடர்பாக எவ்வித சட்டங்களும் இல்லாததால், அப்போது நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், தேர்தல் ஆணையம் அனைத்து கட்சிகளுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில், வாக்குப்பதிவு நேரம் தொடங்குவதற்கு 48 மணி நேரத்துக்குள் தேர்தல் அறிக்கை வெளியிடக் கூடாது என தெரிவித்துள்ளது. மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில், ஒவ்வொரு கட்ட தேர்தல் தொடங்குவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பாக தேர்தல் அறிக்கையை வெளியிட்டுக்கொள்ளலாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.