இந்தியா

வாக்காளர் அட்டையுடன் ஆதாரை இணைக்க பரிசீலனை

வாக்காளர் அட்டையுடன் ஆதாரை இணைக்க பரிசீலனை

webteam

வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ரேஷன் கார்டு, பான் கார்டுகளைத் தொடர்ந்து வாக்காளர் அட்டையை ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. சமையல் காஸ் மானியம், வருமான வரி தாக்கல் போன்ற மத்திய அரசின் பல சலுகைகளை பெற ஆதார் கார்டு அவசியம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க தலைமைத் தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருவதாகவும், ஆதார் அட்டை தொடர்பான வழக்கு  நடைபெற்று வருவதால் நீதிமன்ற உத்தரவிற்கு பிறகு ஆதார் கார்டுடன் வாக்காளர் அட்டை இணைப்பு குறித்து தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என்றும் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.