முதியோர் இல்லத்தில் திருமணம் முகநூல்
இந்தியா

இட்ஸ் நெவர் டூ லட்.. முதியோர் இல்லத்தில் நடந்த காதல் திருமணம்..கேரளாவில் நிகழ்ந்த சுவாரஸ்யம்..!

கேரளாவில் அரசு நடத்தும் முதியோர் நல காப்பகத்தில் வசித்து வந்த விஜயராகவன் மற்றும் சுலோச்சனா ஆகிய இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

Vaijayanthi S

காதலுக்கு கண்ணிலை என்பார்கள். அதுபோல வயதும் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் கேரளாவில் ஒரு சுவாரஸ்யமான திருமணம் நடந்துள்ளது.. அப்படி என்ன சுவாரஸ்யமான திருமணம் என்று தானே நினைக்குறீங்க.. கேரளாவில் ஒரு முதியோர் இல்லத்தில் திருமணம் நடந்துள்ளது. ஆமாம், வயது என்பது ஒரு எண் தான். ஒரு நபர் எவ்வளவு காலம் வாழ்ந்தார் என்பதை அது குறிக்கிறது. ஆனால், அது ஒரு நபரின் திறமைகள், சாதனைகள், அன்பு, காதல் அவர்களின் எதிர்காலம் என எதையும் வரையறுக்காது...

பலர், குறிப்பாக வயதானவர்கள், தங்கள் வயது ஒரு தடை இல்லை என எல்லவிதமான செயலிலும் ஈடுபடுவதையும், மகிழ்ச்சியாக இருப்பதையும் பார்த்துள்ளோம். ஆனால் சிலர் மனதில் ஆசைகள், காதல் இருந்தாலும் வயதாகி விட்டது என எதையும் வெளியே சொல்லாமல் இருந்து விடுவார்கள்.. ஆனால் இந்த தம்பதியினர் வயதானாலும் தாங்கள் முதியோர் இல்லத்தில் வாழ்ந்தாலும் தங்களது உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுத்து, காதலை வெளிபடுத்தி திருமணம் செய்துக் கொண்டுள்ளனர்.. இந்த திருமணம் தற்போது ஆன்லைனில் வைரலாகி வருகிறது.. அதில் அவர்களின் காதல் கதையும் திருமண விழாவின் படங்கள் மற்றும் வீடியோக்களும் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.. இதை பற்றிய முழு விவரங்களையும் இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க..

முதியோர் இல்லத்தில் திருமணம் - கேரளா

விஜயராகவன் (79) மற்றும் சுலோச்சனா (75) என்ற இருவரும் வயதான தம்பதியினர். இவர்கள் முதியோர் இல்லத்தில்தான் முதன் முதலாக சந்தித்துள்ளனர்..இதில் விஜயகவன் 2019 முதல் அங்கு தங்கியிருந்தார், சுலோச்சனா 2024 இல் சேர்ந்துள்ளார். அவர்கள் இருவரும் பார்த்தவுடனேயே பேசிக்கொண்டனர்.. காலப்போக்கில், அது நட்பாக மாறியது.. பின்னர் அவர்களின் நட்பு காதலாக மாறியது. அவர்களின் அன்பு வலுவாக வளர்ந்ததால், தம்பதியினர் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதனால் கடந்த திங்களன்று (ஜூலை 7), முதியோர் இல்ல நிர்வாகத்தின் ஆதரவுடன், எளிமையான முறையில் திருமணம் செய்துக் கொண்டனர்.. இந்த திருமண விழாவில் நண்பர்கள் மற்றும் முதியோர் இல்லத்தில் உள்ள மற்ற அனைவரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

உடலுக்கு வயதானாலும் மனதில் காதல் இளமையாக இருக்கிறது என்பதை போல இந்த திருமணம் நடந்துள்ளது.. இது குறித்து விஜயராகவன் கூறுகையில் இந்த வயதில் எங்களுக்கு இப்படியொரு பந்தம் அமைந்தது மகிழ்ச்சி அளிக்கிறது என தெரிவித்தார்.. இது குறித்து சுலோச்சனா கூறுகையில், இந்தத் திருமணம் எங்கள் வாழ்க்கைக்குப் புதிய அர்த்தத்தை அளித்துள்ளது என்றும் அது தனக்கு மிகுந்த சந்தோஷத்தை அளிக்கிறது என்றும் தெரிவித்தார்..

இந்த முதியோர் இல்ல திருமண விழாவில் கேரளா உயர் கல்வி அமைச்சர் ஆர். பிந்து, நகர மேயர் எம்.கே. வர்ஜீஸ், மற்றும் பிற அதிகாரிகள் கலந்துக் கொண்டனர்.. இந்த அழகான தருணத்திற்கு சாட்சியாக இருப்பதில் நான் பெருமைப்படுகிறேன் என்று அமைச்சர் பிந்து தெரிவித்தார். மேலும் இந்த மகிழ்ச்சியான தருணத்தைக் கொண்டாடிய முதியோர் இல்ல நிர்வாகம், மணமக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கியது..