உணவுப் பற்றாக்குறை AI
இந்தியா

இந்தியாவில் குளிர் காலத்திலும் எல் நினோ தாக்கம்? உணவு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - வெளியான அறிக்கை!

எதிர்வரும் குளிர்காலத்திலும் எல் நினோ தாக்கம் கடுமையாக இருக்கும் என்பதால் இந்தியாவில் உணவுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக கொலம்பியா பல்கலைக்கழக ஆய்வு எச்சரிக்கிறது.

PT WEB

இந்தியாவில் சீரற்ற தென்மேற்குப் பருவமழை மற்றும் தீவிரமடைந்து வரும் 'எல் நினோ' தாக்கத்தால் நாட்டின் உணவுப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகக் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் சர்வதே காலநிலை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரித்துள்ளது. நடப்பு தென்மேற்குப் பருவமழை காலத்தில் இயல்பான அளவைவிட சுமார் 13 சதவீதம் குறைவான மழை பதிவாகியுள்ளது.

RAIN

நாட்டின் 282 மாவட்டங்களில் குறைவான மழையும், 34 மாவட்டங்களில் மிகக் குறைவான மழையும் பதிவாகியுள்ளது. இதனால் காரீஃப் பருவ விதைப்புப் பரப்பு மொத்தமாக 13.54 லட்சம் ஹெக்டேர் குறைந்துள்ளது; குறிப்பாக நெல் விதைப்பு 16.32 லட்சம் ஹெக்டேர் சரிவைச் சந்தித்துள்ளது. கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் வறட்சி நிலவுவதோடு, நீர்நிலைகளின் நீர்மட்டமும் பெருமளவு சரிந்துள்ளது. நாட்டின் 178 முக்கிய நீர்நிலைகளின் நீர்மட்டமும் பெருமளவு சரிந்துள்ளது.

இன்னொருபுறம், தீவிர மழை காரணமாக 6.11 லட்சம் ஹெக்டேர் பரப்பளவிலான பயிர்கள் சேதமடைந்துள்ளன. வரும் குளிர்காலத்திலும் எல் நினோவின் தாக்கம் நீடிக்கும் என்பதால், ரபி பருவச் சாகுபடியும் பாதிக்கப்பட்டு உணவுப் பொருள் தட்டுப்பாடு ஏற்படும் என பொருளாதார நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.