தெலங்கானா மாநிலம், ஸ்ரீசைலம் இடதுகரை கால்வாய் திட்டத்துக்காக நாகர்கர்னூல் பகுதியில் கால்வாய் அமைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக சுரங்கம் தோண்டப்பட்டு வந்தது. கடந்த 22 ஆம்தேதி சுரங்கத்திற்குள் தண்ணீர் பெருக்கெடுத்த நிலையில், கட்டுமானம் இடிந்து விபத்து ஏற்பட்டது.
இதில், ஏராளமானோர் தப்பிய நிலையில் 2 பொறியாளர்கள், 2 ஆப்பரேட்டர்கள், 4 தொழிலாளர்கள் என மொத்தம் 8 பேர் சுரங்கத்துக்குள் சிக்கிக்கொண்டனர். 8 பேர் உள்ளே சிக்கிக்கொண்டனர்.
இவர்களை மீட்கும்பணி கடந்த 7 நாட்களுக்கு மேலாக நடைப்பெற்றுவந்தது. இந்தநிலையில்தான், நிலச்சரிவில் சிக்கிய அந்த 8 பேரும் பலியானதாக அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது . வெப்ப அலை கருவி மூலம் சோதனை செய்ததில் 8 பேர் உயிரிழப்பு என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
தொடர்ந்து, இடர்பாடுகளை அகற்றி உடல்களை மீட்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. சுரங்க நிலச்சரிவில் 5 பேர் சேற்றில் சிக்கி பலியானதும், 3 பேர் இடர் பாடுகளில் சிக்கி பலியானதும் அதிநவீந சிரிய ரக டிரோன் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.