இந்தியா

காஷ்மீரில் பள்ளி, கல்லூரிகள் 19 ஆம் தேதி திறப்பு?

webteam

காஷ்மீரில் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் வரும் 19 ஆம் தேதி திறக்கப்படும் என்று கூறப்படுகிறது.

370-வது பிரிவின்படி, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட, சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு சமீபத்தில் ரத்து செய்தது. இதைப்போல அந்த மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கப்படு கிறது. இதையடுத்து அங்குள்ள 10 மாவட்டங்களில் கடந்த 5 ஆம் தேதி முதல் கட்டுப்பாடுகள் விதிக் கப்பட்டுள்ளன. 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதோடு, செல்போன் மற்றும் இணைய சேவைகளும் முடக்கப்பட்டன. அம்மாநில முன்னாள் முதல்வர்கள் மெகபூபா, ஒமர் அப்துல்லா மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் சிலர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். 

இந்த நடவடிக்கைகளின் காரணமாக, பள்ளிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் முடப்பட்டிருந்தன. இப் போது அங்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக தளர்ததப்பட்டு வருகிறது. சில நாட்களுக்கு முன், ஐந்து மாவட்டங்களில் மட்டும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன.

இந்நிலையில், வரும் 19 ஆம் தேதி அம்மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளும் திறக்கப்பட இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.