ED Raid ANI | Twitter
இந்தியா

குஜராத்: அமலாக்கத்துறை சோதனையின்போது கட்டுக்கட்டாக சிக்கிய 2,000 ரூபாய் நோட்டுகள், சொத்து ஆவணங்கள்!

ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான 2000 ரூபாய் தாள்கள், கணக்கில் வராத பணம் மற்றும் சொத்துக்கள் பணபரிவர்த்தனைக்கான ஆவணங்கள் அமலாக்கத்துறையினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

Jayashree A

குஜராத்தில் சுரேஷ் ஜகுபாய் என்ற தொழிலதிபர் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்திய பொழுது ஏராளமான கணக்கில் வராத பணம், சொத்துக்களின் ஆவணங்கள் மற்றும் பண பரிவர்த்தனைக்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

பண மோசடி குற்றச்சாட்டுக்கு உள்ளான தொழிலதிபர் சுரேஷ் ஜகுபாய் படேலுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை செய்ததில் கட்டுக்கட்டாக 2000 ரூபாய் நோட்டுக்களையும் கைப்பற்றி இருக்கின்றனர்.

மேலும் இவருக்கு சொந்தமான 9 இடங்களிலும், இவரது கூட்டாளிகளின் வீடுகளிலும் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனையில் இறங்கியுள்ளனர். இதில் 1.62 கோடி ரூபாயை பறிமுதல் செய்து உள்ளனர். இதில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான 2000 நோட்டுக்கள் இருந்ததாகவும், பல சொத்துக்களுக்கான ஆவணங்கள், பணபரிவர்த்தனை ஆவணங்கள், 3 வங்கி லாக்கர் சாவிகள் போன்றவை கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து அமலாககப்பிரிவினர் தீவிர விசாரனை நடத்தி வருகின்றனர். விரைவில் அமலாக்கத்துறையினரால் சுரேஷ் ஜகுபாய்க்கு சம்மன் அனுப்பப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.