பூபேஷ் பாகெலின் மகன் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் web
இந்தியா

மதுபானங்கள் கொள்முதலில் ரூ.1000 கோடி ஊழல்.. பூபேஷ் பாகெலின் மகன் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்!

சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் மகனுக்கு எதிராக அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.

PT WEB

சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகெலின் மகன் சைதன்யா பாகெல், மதுபானங்கள் கொள்முதலில் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் செய்ததாக, அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

பூபேஷ் பாகெலின் மகன் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்..

சத்தீஸ்கரில் 2003 முதல் 2018 வரையிலான பாஜக அரசை முடிவுக்கு கொண்டுவந்து, அம்மாநில காங்கிரஸின் முகமாக திகழ்பவர் பூபேஷ் பாகெல். 2019-23 காலகட்டத்தில் பூபேஷ் பாகெல் தலைமையிலான காங்கிரஸ் அரசின்போது, அவரது மகன் சைதன்யா பாகெல், மதுபான ஊழலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

பூபேஷ் பாகெலின் மகன் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்

2023இல் மீண்டும் பாஜக ஆட்சி வந்தபோது, இதுகுறித்த விசாரணை தீவிரமடைந்தது. அமலாக்கத் துறையும் தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரித்தது. கடந்த ஜூலை மாதம் சைதன்யா பாகெலை கைது செய்த அமலாக்கத்துறை, மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஏழாயிரம் பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அதில், மதுபான கொள்முதலுக்காக மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட ரகசியக்குழு அமைத்து, ஆயிரம் கோடிரூபாய் வரை ஊழல் செய்ததாக குற்றம் சாட்டியுள்ளது. அதை ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்து, வெள்ளையாக மாற்றியதாகவும் குற்றம்சாட்டியுள்ளது.