பொருளாதார ஆய்வறிக்கையில் முதன்முறையாக விக்கிப்பீடியாவில் உள்ள தரவுகள் தகவலுக்காக சுட்டிக்காட்டப்பட்டுள்ளன
2019-2020ஆம் நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். தற்போது
நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக உள்ள அம்சங்கள் நீங்கி வருவதால் வரும் நிதியாண்டில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும் என அந்த
அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மலிவு விலை வீடு திட்டம், மேக் இன் இந்தியா திட்டம், கார்ப்பரேட் வரிக் குறைப்பு, தொழில் நடைமுறைகள்
எளிதாக்கல் போன்ற காரணங்களால் வளர்ச்சி அதிகரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் சர்வதேச சூழல்கள் எதிர்மறையாக அமைந்தால்
வளர்ச்சி பாதிக்கும் அபாயம் உள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், பொருளாதார ஆய்வறிக்கையில் முதன்முறையாக விக்கிப்பீடியாவில் உள்ள தரவுகள் தகவலுக்காக சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. பொதுவாக
நம்பகத்தன்மை வாய்ந்த புள்ளி விவரங்களையே பொருளாதார ஆய்வறிக்கையில் சுட்டிக் காட்டப்படும். விக்கிப்பீடியா என்பது அவ்வளவு நம்பகத்தன்மை
வாய்ந்த தகவல் களஞ்சியம் அல்ல. அதனால், விக்கிப்பீடியாவில் உள்ள தகவல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதை பலரும் சமூக வலைதளங்களில்
குறிப்பிட்டு வருகின்றன.