இந்தியா

"நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 9.5% ஆக இருக்கும்" - சக்திகாந்த தாஸ்

jagadeesh

நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9.5 சதவிகிதமாக இருக்கும் என ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை இன்று அறிவிக்கப்பட்ட நிலையில், கடன்களுக்கான வட்டி விகிதங்களில் மாற்றமில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு அளிக்கும் ரெப்போ வட்டி விகிதம் 4 சதவிகிதமாகவும், ரிவர்ஸ் ரெப்போ விகிதம் 3.35 சதவிகிதமாகவும் தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் 9.5 சதவிகிதமாக வளர்ச்சி காணும் எனவும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. பொருளாதார பாதிப்பு கொரோனாவின் முதல் அலையில் ஏற்பட்டதுபோல இரண்டாவது அலையில் கடுமையாக இருக்காது எனத் தெரிவித்துள்ள ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்ததாஸ், நாட்டின் ஏற்றுமதி அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளார். மேலும், இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு மதிப்பு இதுவரை இல்லாத அளவாக 600 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.