தேர்தல் தொடர்பான விவரங்களை தெரிந்து கொள்ள இந்திய தேர்தல் ஆணையம் இசிஐ மொபைல் ஆப் எனும் புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்திய தேர்தல் ஆணையம் தற்போது வெளியிட்டுள்ள இந்த புதிய செயலியின் மூலம் தேர்தல் செயல்பாடுகள், தேர்தல் நடைபெறும் நாட்கள், அரசியல் கட்சிகள், வாக்குசாவடி, வேட்பாளர் மற்றும் வாக்காளரின் விவரங்கள் போன்ற அனைத்து தகவல்களையும் அறிய முடியும். இதனை ஆண்ட்ராய்டு வெர்சன் 4.1 மற்றும் அதற்கு அதிகமான வெர்சன்கள் மாடலில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விரைவில் ஐபோனுக்கு இந்த ஆப் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தல் தொடர்பான விபரங்களை இதுவரையில் தேர்தல் ஆணைய இணையதளம் மூலம் மட்டுமே அறிந்து கொள்ள முடியும். இந்நிலையில் தற்போது மொபைல் மூலம் தெரிந்து கொள்ள புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.