இந்தியா

ஜிஎஸ்டி எதிரொலி; திருப்பதி காலெண்டர், டைரி விலை உயர்வு

ஜிஎஸ்டி எதிரொலி; திருப்பதி காலெண்டர், டைரி விலை உயர்வு

webteam

ஜி.எஸ்.டி எதிரொலியால் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் டைரி மற்றும் காலண்டர்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. 

2018ஆம் ஆண்டுக்கான டைரி, காலெண்டர்களை வரும் 23ஆம் தேதி ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு வெளியிடவுள்ளார். இதுநாள் வரை 7, 10, 15, 75 ரூபாய்களுக்கு விற்கப்பட்டு வந்த காலண்டர்கள், 10, 15, 20, 90 ரூபாய் என விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதே போல் 75 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த டைரி 90 க்கும், 100க்கு விற்கப்பட்டு வந்த டைரி 120ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படவுள்ளது. ஜிஎஸ்டியால் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள தேவஸ்தான நிர்வாகம், சென்ற ஆண்டை விட அதிகளவில் காலெண்டர் மற்றும் டைரிகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.