மக்களவைத் தேர்தல், 4 மாநில பேரவைத் தேர்தல்களை முன்னிட்டு அரசு அதிகாரிகளை இடம் மாற்ற செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இன்னும் சில மாதங்களில் நாடே உற்றுநோக்கும் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. மக்களவை தேர்தலோடு ஆந்திரா, அருணாச்சலப் பிரதேசம், ஒடிஷா, சிக்கம் மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களும் நடைபெற உள்ளன. இந்நிலையில் மக்களவைத் தேர்தல், 4 மாநில பேரவைத் தேர்தல்களை முன்னிட்டு அரசு அதிகாரிகளை இடம் மாற்ற செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அனைத்து மாநில, யூனியன் பிரதேச தலைமைச் செயலாளர்களுக்கு தேர்தல் ஆணையம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
அதன்படி சொந்த மாவட்டத்திலோ அல்லது ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் அதிகாரிகளை பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் இடமாற்றம் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மக்களவை தேர்தலுக்கு தயாராக இருக்கும்படியும் மாநில அரசுகளை தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.