இந்தியா

வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளுக்குத் தடை

வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளுக்குத் தடை

webteam

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் ஐந்து மாநிலங்களில் வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிடத் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

உத்தரப்பிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தராகண்ட் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைக்கான தேர்தல் பிப்ரவரி 4ம் தேதி தொடங்கி மார்ச் 8ம் தேதி நடக்கிறது. தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் பிப்ரவரி 4ம் தேதி முதல் மர்ச் 8ம் தேதி வரை கருத்துக் கணிப்புகள் வெளியிடத் தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த மாநிலங்களில் பதிவான வாக்குகள் மார்ச் 11-ல் எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.